பிள்ளையான் ஆலோசகரின் முகநூல் வேஷம் கலைந்தது .மாவீரர்களை கொச்சப்படுத்தியதால் சினம் கொள்ளும் மட்டகளப்பு மக்கள்.



‘கௌரி மனோகரி` என்னும் பெயரில் இயங்கும் முகநூல் கடந்த காலத்தில் பிரதேச வாதத்தையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை விமர்சிப்பதை தனது தொழிலாகக் கொண்டிருந்தது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் நடந்த போராட்டம் பெற்ற மக்கள் ஆதரவை சகிக்க இவர்கள்  அந்த வேதனையுடனும் வெப்புசாரத்துடனும் அண்ணாச்சி சாணக்கியனுக்கு! என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டதுஇந்த முகநூல்.   கௌரி மனோகரி தான் இரண்டு மாவீரர்களின் சகோதரி எனக்  குறிப்பிட்டிருந்தார். பெரும் பரபரப்பாக இருந்தது இக் கடிதம் . கௌரி மனோகரி போலி என்றும் இதை இயக்குபவர்  பிள்ளயானின் ஆலோசகர் பிரான்சில் வசிக்கும் ஸ்டாலின் ஞானம் என்பதை "திறவுகோல்" எனும் மின்னிதழ் வெளியீட்டுள்ளது .

அதன் முழு விபரமும் இங்கே தரப்பட்டுள்ளது .
குதிரை வேடம் போடும் கழுதை!
 
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார் ஐந்தில் நாலு பெரும்பான்மையுடன்  ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர் ஜெயவர்த்தனா. அவரிடம் ஒரு வினா தொடுக்கப்பட்டது "ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன?“ புன்னைகையுடன் ஜே.ஆர் பதிலளித்தார்."ஆணைப் பெண்ணாக மாற்றமுடியாது; பெண்ணை ஆணாக மாற்றமுடியாது. அதைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் அவருக்கு உண்டு" அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசிக்கொள்ளப்பட்ட விடயம் இது.
ஜே.ஆர் சொன்ன பதிலில் முடியாது என்று சொன்ன முதலாவது விடயத்தையும் தன்னால் முடியும் என்று நிரூபிக்க தலைகீழாக முயன்றுவருகின்றார் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர்.கனடாவிலிருந்து கௌரி மனோகரி என்ற பெயரில் ஒருவர் அடிக்கடி யாழ்ப்பாணத்தவருக்கு எதிராக எழுதி வருகிறார். 1985 ம் ஆண்டு பிறந்ததாகக் குறிப்பிடும் இவர் 1987 ஆண்டு லேயே கல்முனை பாத்திமா கல்லூரியில் அனுமதி பெற்றதாக குறிப்பிட்டதை சின்னையா ராஜ்குமார் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மூன்று வயதில் தேவாரம் பாடினார் என்றுதான் நாம் இது வரை படித்துள்ளோம். ஞானசம்பந்தரை விட  இன்னும் அட்வான்சாக இரண்டு வயதிலேயே பாடசாலையில் சேர்ந்ததாக குறிப்பிடுவது முதலாவது விடயம்.  
புலிகளைச் கொச்சைப்படுத்தவேண்டும்;அதேசமயம் தான் இரு மாவீரர்களின் குடும்பத்தவராக சுத்துமாத்து பண்ணவும் வேண்டும் என்பது அவரது பகீரதப்  பிரயத்தனம். மாவீரர் குடும்பத்தவர்களே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள் என்றால் இவர் சொல்வதில் உண்மை இருக்கக்கூடும் என வாசிப்போருக்கு ஒரு எண்ணத்தை உண்டாக்க வேண்டும்  என்பது இவரது அடுத்த முயற்சி.
மட்டு. அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்கள் அனைவரது விபரங்களையும் கிராம சேவை அலுவலர் பிரிவு ரீதியாக வகைப்படுத்தி வைத்துள்ளார் பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை விடுதலைப் பணியாற்றிய ஒருவர்.
அண்மையில் அன்புள்ள அண்ணாச்சி சாணக்கியனுக்கு! வேதனையுடனும் வெப்புசாரத்துடனும் ஒரு கல்முனையாள் என்று குறிப்பிட்டு பல்வேறு விடயங்களை கௌரி மனோகரி வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக தொடர்ச்சியாக வடக்குத் தலைமைகள் மட்டக்களப்புத் தமிழரை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு அநேக கற்பனைகளைச் சுமந்து வெளிவந்தது இந்தப் பகிரங்கக் கடிதம்.இதனைத் தொடர்ந்து "விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தோரையே பொதுவாக மாவீரர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் ,புளொட், முதலான இயக்கங்கள் வேறு பெயரில் தமது உறுப்பினர்களை நினைவு கூருகின்றனர்; எனவே தாங்கள் எந்தக் கிராமசேவை அலுவலர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்துவீர்களாகின் அந்தப் பிரிவைச் சேர்ந்த மாவீரர்களின் முழுவிபரத்தையும் நான் தருகிறேன். அந்தப் பெயர்பட்டியலில் தங்கள் சகோதரர்களின் பெயர்விபரம் இல்லையெனில்  அவர்கள் புளொட்டிலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் விலோதான் அங்கம் வகித்திருக்கக் கூடும்“ என மாவீரர் பட்டியலை வகைப்படுத்தி வைத்துள்ள அந்தப் போராளி குறிப்பிட்டார்.  
வட்டுக்கோட்டைக்கு வழி எது என்று  கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று பதில் சொல்வது போல் "நேற்று நான் இட்ட பதிவு 452 பேர் தடவைகள் முகநூலில் பகிரப்பட்டுள்ளது. நன்றி மக்காள்“ என்று குறிப்பிட்டுள்ளார் கௌரி மனோகரி.
கிராம சேவை அலுவலர் பிரிவை க் குறிப்பிட்டால் அந்தப் பிரிவுக்குள் கௌரி மனோகரியின் அப்பாவின் பெயருக்குப்  பின்னால் குறிப்பிட்டமாவீரர்கள் இருவரது  பெயரும் இருக்க வேண்டுமே. இரண்டு வயதில் பாடசாலையில் சேர்ந்தேன் என்பது போலவே இரு மாவீரர்களின் சகோதரி என்பதும் கலப்படமில்லாத பொய்யே. மாவீரர்களின் பெயரில் நடைபெறும் இந்த மோசமான செயற்பாட்டுக்கு என்ன நியாயம் கற்பிக்கப்போகிறார்கள்?
எங்கே முகநூல் பதிவு செய்யப்பட்டுள்ளது .என்று பார்த்தால் அது கனடாவில் அல்ல. கொழும்பில்தான்.  அங்கு பல தரப்பினருக்கும் பல்வேறு தேவைகள் உண்டு. அதற்கான ஏற்பாடுகள் தயக்கமின்றி நடக்கும். யாழ் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் பேரம்பலம் கூட்டமைப்பினருடன் சென்ற போது ஈ.பி .டி யின் நெப்போலியன் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மாவை ,சிவாஜிலிங்கம் முதலானோரும் இத் தாக்குதலில் காயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக நீதி மன்றத்தால் நெப்போலியனுக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டது. இக் காலப்பகுதியில் நெப்போலியன் சாவகாசமாக கொழும்பினுடாக ஏதோ ஒரு பெயரில் ஐரோப்பியா நாடொன்றுக்கு பயணமானார் என்று கூறப்பட்டது.  அதேபோல கருணாவும் சிங்களவர் ஒருவரின் பெயரில் கடவுச் சீட்டுப் பெற்று லண்டனுக்கு பயணமானார் .
அது போலவே கௌரி மனோகரி என்ற பெயரில் எழுதுபவரின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை சில தரப்பினருக்கு இருந்திருக்கலாம்.
 
அடுத் து கௌரி மனோகரி யார் என ஆராய்ந்து கொண்டு போனால் உண்மைகள் என்றபெயரில் ஒரு இணையதளமும்  இலக்கிய வட்டமும் இருப்பது தெரியவந்துள்ளது . அந்த இலக்கிய வட்டத்தின் பிரமுகரிடம் துருவித் துருவி விசாரித்ததில் கௌரி மனோகரி என்ற பெயரில் எழுதி வருவது ஸ்ராலின் ஞானம் என்ற முன்னாள் புளொட் உறுப்பினரே என்ற உண்மையை உடைத்தார்.
கடைசியில் கௌரி மனோகரி என்ற பெயரில் இவ்வாறாக வரலாற்றைத் திசை திருப்பும் முயற்சியை இவ்வளவு காலமும் கனகச்சிதமாக செய்து வந்திருக்கிறார் ஸ்டாலின் ஞானம்.
இன்னுருவரிடம்   இப் பெயருக்குரியவராக ஒரு பெண்ணின் புகைப்படம் காணப்படுகிறதே என்று கேட்டதற்கு சிரிப்புடன் பதில் கிடைத்தது.  P R R frnds ,  rpr -reddy.blogspot.com என்பதைத் தேடிப்பாருங்கள் சொல்லிவிட்டு நாம் முயற்சிக்கும் முன்னரே தானே தனது தொலைபேசியில் வந்த விடயத்தைக் காட்டினார். விளம்பரத்துக்கு பயன்படுத்தக்கூடிய முறையில் வரிசையாக வந்த இளம்பெண்களின் 23 இடத்தில் இப்புகைப்படம் உள்ளது . இதனை வாசிப்போரும் முயற்சித்துப் பார்க்கலாம்.
இவர் போன்றோர் அளவெட்டியில் இறைகுமாரன் - உமைகுமாரனைக் கொலைசெய்துவிட்டு அவர்களுக்கு அஞ்சலிக்கூட்டம் நடத்தினர் மட்டக்களப்பில். யோகன் கண்ணமுத்து தலைமையில் நடந்த இக் கூட்டத்தின் பிரதம பேச்சாளர் இரா.வாசுதேவா. சில நாட்களின் பின் அமிர்தலிங்கம் சொன்னார் "சுட்டவர்களே  அஞ்சலிக்கூட்டம் நடத்துகிறார்கள்" என்று . இந்தக் குழுவில் அங்கம் வகித்த ஸ்டாலின் ஞானம் போன்றோர் விடுதலைப் போராட்டத்தை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சுழிபுரத்தில் விடுதலைப்புலிகளின் சுவரொட்டிகளை ஒட்டச் சென்ற ஆறு மாணவர்களைச் சித்திரவதைசெய்து கொன்றவுடன் ஒருவரின் ஆணுறுப்பையும் வெட்டி வாயில் வைத்தனர். இவ்வாறான செயல்களை நியாயப்படுத்திக்கொண்டு அல்லது மௌனமாக அங்கீகரித்துக்கொண்டுதான் ஸ்டாலின் ஞானம் வாழ்ந்திருக்கிறார். இவர் மட்டக்களப்பில் எந்த ஆணியை யும் புடுங்கியதாக வரலாறு இல்லை . சோத்துப்பார்சல் இயக்கமென்ற பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தார்.
இவரது திருமணம் கூட ஒரு மாவீரரின் சகோதரியின் இல்லத்தில்தான் நடைபெற்றது .தனது தரப்பிலோ மணப்பெண்ணின் தரப்பிலோ நடைபெறாமல் வேறு வேறு இடத்தில்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்ற இவரது எதிர்பார்ப்பை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலில் களப்பலியான (ரவி) (வாமதேவன்)யின் சகோதரி நாவற்குடாவில் இருந்த தனது வீட்டில் சாத்தியமாக்கினார். இன்றோ மாவீரர்களின் பெயரில் மோசடி செய்கிறார் ஞானம்.
கருணா இவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை பிள்ளையானின் ஆலோசகர் போல செயற்பட்டு வருகிறார் .
பாம்பு கடித்த ஒருவன் செத்துவிட்டான் . அவனது சடலத்தை தூக்கிச் சென்றோர் நாசமாப் போன பாம்பு என்று என்று திட்டிக்கொண்டே சென்றனர் . வீதியோரமாக கிடந்த மண்புழு பாம்பென்றால் கடிப்போம் தானே என்றதாம். இந்த மண்புழு புழுவின் நிலையில் தான் ஞானம் உள்ளார். விடுதலைப் போராட்டத்துக்கும் உருப்படியான பங்களிப்பைச் செலுத்தவில்லை தன்னையும் பாம்பாக கருதி படமெடுத்ததாட முனைகிறார் இவர். கௌரி மனோகரி என்ற வேடமும் கலைந்து போயிற்று. இதற்குள் கௌரி அக்கா என்று நவநீதன் போன்றோரின் பின் பாட்டும் வேறு  
இவரைப் போன்றோருக்காக நினைத்ததை முடிப்பவன் படத்தில் மருதகாசி ஒரு பாடலை எழுதியுள்ளார் எம்.ஜி.ஆர் இப் பாடல்க் காட்சியில் நடித்துள்ளார்.
 
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே










புதியது பழையவை