திருகோணமலையில் தமிழ் உணர்வை வீறுகொண்டு வெளிப்படுத்திய பெண்கள்!



வடகிழக்கு சிவில் சமூக அமைப்பால் ஒழுங்கு படுத்தபட்ட பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியின் இரண்டாம் நாள் போராட்டம் தற்போது திருகோணமலையில் தரித்துள்ளது.

நாளை காலையில் திருகோணமலையில் ஆரம்பமாகி மணலாறு வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடையும்.

நாளை நண்பகலை அண்டி முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் மத தலைவர்கள் இணைந்து பேரணி வரவேற்கப்பட்டு பேரணியோடு இணைந்து தொடர்ந்து முல்லைத்தீவு நகரம் நோக்கி செள்ளவுள்ளனர்.

எனவே முல்லைத்தீவில் பேரணியோடு ஒன்று கூட கூடியயவர்கல்ளை உடுப்புக்குளம் பகுதியில் இணைந்து கொள்ளுமாறு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட் தந்தை லியோ ஆம்ஸ்ரோங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இன்று மாலை இந்த நடைபவனிப் போராட்டம் திருகோணமலையை அண்மித்தபோது ஆயிரக்கணக்கில் பெண்களும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தந்திருந்ததாக களத்திலுள்ல எமது செய்தியாளர் கூறுகின்றார்.

நேற்றைய தினம் பொத்துவிலில் போராட்டம் ஆரம்பமானபோது பலத்த மழை மற்றும் பொலிஸ் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கலந்துகொண்டவர்களை விட இன்றைய போராட்டத்தில் பன்மடங்கு மக்கள் கலந்துகொண்டதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை