கொரோனா தொற்றினால் இலங்கையில் பதிவான முதல் மருத்துவரின் மரணம்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவரான கயான் தந்தநாராயண இன்று ( செவ்வாய்கிழமை ) காலை உயிரிழந்துவிட்டதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

இவர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்திருக்கின்றார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டாக்டர் கயான் தந்தநாராயண, ராகம வைத்தியசாலையில் பணியாற்றிவந்ததோடு கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.


புதியது பழையவை