மட்டக்களப்பில் மீண்டும் மழை..!

கடந்த மார்கழி மற்றும் தை மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்ததனால் மாட்டத்திலுள்ள பெரும்பாலான தாழ் நிலங்கள் வெள்ளத்தில மூழ்கியிருந்தன. இந்நிலையில் தை மாத இறுத்திப்பகுதியில் மழை சற்று ஒய்ந்திருந்ததனால் மழை வெள்ளம் வடிந்திருந்த இந்நிலையில் மீண்டும் மழை பொழியத் தொடங்கியுள்ளதனால் தாழ்நிலங்களில் வெள்ள

 நீர் தேங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது நெல் அறுவடைக் காலம் ஆரம்பித்துள்ளதனால் இவ்வாறு தொடர்ந்த மழை பெய்து வருவதனால் அறுவடை செய்யும் விவசாயிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதுபோல் கத்தரி, மிளகாய், வெண்டி போன்ற மேட்டுநில பயிற் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பயிர்களும் வெள்ளத்தில் அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மேட்டுநில விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க வீதிகளிலும், மழை வெள்ளம் தேங்கிக் கிடப்பதனால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீPற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலைய்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை