கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பு இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது சடலம் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.


