கிழக்குமாகான பளு தூக்கல் போட்டி





2020 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 13.03.2021 அன்று மாகாணமட்ட பளுதூக்கல் போட்டியானது திருகோணமலை நகராண்மை கழக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அம்பாறை ,மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட வீர வீராங்கணைகள் கலந்து கொண்டனர் இதில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதித்துவப்படுத்திய கழகங்களில் ஒன்றான BATTI EMPIRE (பற்றி எம்பயார்) விளையாட்டுகழகம் ஆண்கள் பிரிவில் 2 தங்கம் , 1 வெள்ளி , 1 வெண்கலம் உட்பட பெண்கள் பிரிவில் 3 தங்கம் , 2 வெள்ளி , 2 வெண்கலம் உட்பட மொத்தமாக 11 பதக்கங்களை சுவீகரித்து கழகத்துக்கும் மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட வீராங்கணைகள் மட்ஃமகாஜனா
கல்லூரி , மட்ஃஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி, மட்ஃவின்சன்ட் மகளிர்
உயர்தர பாடசாலை மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பளுதூக்கல் போட்டிகளில் பல வீர வீராங்கணைகளை உருவாக்கி பதக்கங்களை சுவீகரித்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து
கொடுப்பதில் BATTI EMPIRE விளையாட்டு கழகம் அதிக சிரத்தையுடன்
செயற்பட்டு வருகின்றது.


புதியது பழையவை