மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு



 மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்  களுவாஞ்சிகுடி மாணவத்தலைவர்களுக்கான சத்தியப்பிரமாணம் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வும்  இடம் பெற்றன

பாடசாலையின் திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு.எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயப் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.பீ.திவிகரன் , உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு.நேசகந்திரன் , திரு.இதயகுமார் , களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை , வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . புவனேந்திரநாதன் , களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மேஜர் பிரேமரெட்ண. ஒழுக்காற்று குழு உறுப்பினர் திரு.கே.கோவண்ணன் , ஆரம்ப பிரிவு பகுதித்தலைவரும் ஒழுக்காற்று குழு செயலாருமான திரு.கேதீஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவத்தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்தனர்

புதியது பழையவை