கடைக்கு சாப்பாடு வாங்க போன யுவதியின் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்


மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சாப்பாடு வாங்கச் சென்ற யுவதி ஒருவரை காதலிப்பதாக நடித்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் தொடர்பில் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நாவற்குடாவைச் சேர்ந்த 18 வயது யுவதி குறித்த கடைக்கு சாப்பாடு வாங்குவதற்கு அடிக்கடி செல்வதை அவதானித்த இளைஞன் அவரை பின் தொடர்ந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை வீட்டில் விடுவதாக வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றி மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு சொந்தமான பாழடைந்த விடுதியில் பூட்டி வைத்து நண்பருடன் இணைந்து யுவதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

குறித்த யுவதியிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும் இல்லாதபட்ச்சத்தில் தங்க சங்கிலியை அறுத்து சென்றதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கைதானவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட கூளாவடி மற்றும் உப்போடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் கையடக்க தொலைபேசி ஜ.எம்.ஓ ஊடாக கொள்ளையர்களின் படங்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ததுடன் கொள்ளையிட்ட தங்கச் சங்கிலி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டோட்டர் சைக்கிள் ஒன்று இரு கையடக்க தொலைபேசிகளும் மீட்டன

குறித்த நபர்களை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புதியது பழையவை