இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல், வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும் கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் உட்பட வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

