கிண்ணியா - கொழும்பு வீதியில் முனைசேனை பிரதேசத்தில் நேற்று (16) மாலை இடம்பெற்ற விபத்தொன்றில், 68 வயதான வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா வில்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 68 வயதான டெயிலர் நசீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிண்ணியாவில் இருந்து இவர் சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வில்வெளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.