மனைவியை கொன்று தீ மூட்டி அதே தீயில் தற்கொலை செய்த கணவன்





கம்பளையில் விவாகரத்து பெற இருந்த தம்பதியினர், கொடூரமாக தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்து உடலுக்கு தீ மூட்டிய கணவன், அதே தீயில் தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியினர், கம்பளை-அங்குருமல்ல பகுதியில் ஒரே காணியில் வெவ்வேறாக வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே இவ்வாறு கணவன் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 57 வயதானவர் எனவும் கணவனுக்கு 68 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை