மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு




சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று மாலை கட்சி தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் தலைவியும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேல்,செயலாளர் த.ஜெயராஜ்,வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித்,மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரனி திருமதி மங்களா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஊர்வலங்கள் தவிர்க்கப்பட்டு கட்சி வளாகத்திற்குள் நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது சர்வதேச மகளிர் தினத்தினை குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மகளிர் தினத்தின் சிறப்பு தொடர்பிலான சிறப்பு உரைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கட்சியின் வளர்ச்சிக்கு சிறப்பாக செயலாற்றிய பெண்கள் கட்சியினால் கௌரவிக்கப்பட்டனர்.

புதியது பழையவை