இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிக்கு கடிதம்




ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ இந்தியாவானது உலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம்மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட ‘பூச்சிய வரைவு’ என அழைக்கப்படுகின்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.
புதியது பழையவை