பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பருத்தித்த்துறை மற்றும் வல்வட்டிதுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வேண்டுகோள் தொடர்பில் பொலிஸாரின் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான மாதினி விக்னேஸ்வரன், ருவான் குணசேகர, மாதவ தென்னக்கோன் ஆகியோர் முன்னிலையாகி உள்ளனர்.
அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன், கே.சயந்தன் உள்ளிட்ட 11 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த நிலையிலே, குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
