மெனிக்கே ரயில், நாவலப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளது


பதுளை – கொழும்பு ரயில் மார்க்கத்திலான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயில், நாவலப்பிட்டி பகுதியில் இன்று மதியம் 12.30 அளவில் தடம் புரண்டுள்ளது
ரயிலின் பின்புற எஞ்சின் தன்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ள காரணத்தினால், குறித்த எஞ்ஜின் பகுதி தவிர்ந்த ஏனைய ரயில் பெட்டிகள், நாவலப்பிட்டி ரயில் நிலையம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடைந்தததன் பின்னர், ரயில் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவத்துள்ளது
புதியது பழையவை