மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் கல் உடைப்பதற்கான கல்குவாரி அனுமதிப்பத்திர காலவதியான நிலையில் அதற்கு பயன்படுத்தும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை இன்று 27-03-2021 சனிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் வெடிபொருட்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக. வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் கல்குவாரியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன்போது கல் உடைப்பதற்காக பயன்படுத்திய வெடிபொருட்கள் அனுமதிப்பத்திரம் காலவதியான நிலையில் வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்தது.
166 டைனமற்குச்சிகள், 10 யார் கொண்ட சேவா நூல் 20, 20 டெக்கினேற்றுக்களை மீட்டு வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

