காத்தான்குடியில் வீதி விபத்து!

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி நகரில் நேற்றிரவு (13)9.30மணியளவில் இடம் பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை பக்கமாக வந்த காரொன்று யூ வளைவில்திரும்பியபோது அதிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி காரின் முன் டயரினுள் புகுந்துள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் காயமடைந்துள்ளனர். கிரான் குளத்தை நோக்கிச் சென்ற மோட்டடர் சைக்கிளே அதிக வேகம் காரணமாக காரில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளுக்கும் காருக்கும் பலத்த சேதம் எற்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










புதியது பழையவை