இளம் தொழில் முனைவோருக்கு காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.





இந்த ஆண்டில் 20 ஆயிரம் இளம் தொழில் முனைவோருக்கு காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, காணி அமைச்சின் செயலாளர்
ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க தெரிவித்துள்ளார்

குறித்த திட்டத்திற்கமைய, நாடு முழுவதும் 35 ஆயிரம் இளம் தொழில் முனைவோர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட தொழில் முனைவோருக்கான நேர்முகத்தேர்வு தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நேர்முகத்தேர்வு எதிர்வரும் 2021-03-31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் காணி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வணிகம் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு காணி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காணிகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கப்படுமென காணி அமைச்சின் செயலாளர் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க  மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை