ஐ.நாவில் ஸ்ரீலங்கா மீதான வாக்கெடுப்பில் மேலும் தாமதம்! முடிவு எப்போது




ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரம் தாமதமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா தொடர்பிலான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பத்தினால் இன்றைய தினம் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஸ்ரீலங்கா நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இச் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று ஐரோப்பிய நேரம் 10.30 மணிக்கு மேற்கொள்ளப்படும் என்றும் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன
புதியது பழையவை