இந்த தீ விபத்தில் அப்பகுதியிலிருந்த 20குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவல் ஏற்பட்டதையடுத்து தோட்ட மக்கள், நிர்வாகம், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து கடும் பிரயத்தனத்திக்கு மத்தியில் சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் குயிருப்புகளில் இருந்த அத்தியவசிய பொருட்கள், ஆடைகள், மற்றும் ஆவணங்கள்,என்பன எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்குள்ளான லயன் தொகுதியிலுள்ள 24 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் வரை நிர்கதிக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களை குயின்ஸ்லேன் தமிழ்வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார் மின் ஒழுக்கு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
