தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கியமை என்பது எந்த அரசாங்கத்தினதும் பொது திட்டத்தின் ஊடாக அல்ல குறிப்பாக இது இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கும் திட்டத்தின் ஊடாகவோ அல்லது எந்த அரசின் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவோ இந்த காணிகளை எமக்கு வழங்கவில்லை.
இது கடந்த 2009 ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக விடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் படி அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட முயற்சிகளின் படி இந்த காணிகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கிடைத்துள்ளன.
அதுவும் இது ஊடகவியலாளர்களுக்கான முதல் கட்டமே. இன் பல ஊடகவியலாளர்களுக்கு இரண்டாம் கட்டம் வழங்கப்படவுள்ளது.
ஆனால் 2009 ஆண்டு எமது அமைப்பின் சுய முயற்சியால் கிடைத்த இந்த காணி வழங்களுக்கு எதிராக எந்த முயற்சியும் எந்த விண்ணப்பமும் செய்யாத ஊடக சம்மேளனம் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளமை மிக மோசமான இனவாத நடவடிக்கை.
உங்களுக்கு தேவையாக இருந்தால் நீங்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொடுத்தது முறைகேடு என்று சொல்வதற்கு எந்த வித நியாயமும் இல்லை.
எங்காவது எந்த அரசாவது காணி இல்லாத ஊடகவியலாளர்களுக்கு காணி தருகிறோம் விண்ணப்பியுங்கள் என்று கூறவில்லை. அல்லது இந்த திட்டம் மாவட்டம் மாவட்டமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை இது முழுக்க முழுக்க முதல் முதலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தனிப்பட்ட முயற்சியின் தொடர்ச்சியாக . கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களின் தலையீட்டால் இரண்டு வருடங்களின் பின்னர் சாதாரண காணி ஆணைக்குழுவின் காணிகள் பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் படி இன்று எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்குரிய முழு அதிகாரம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உண்டு அதேபோல் ஊடகவியலாளர்கள், போது மக்கள் அல்லது ஏனைய தரப்பினருக்கும் இதனை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் அதிகாரம் உண்டு. இதில் காணி இல்லாதவர்கள் காணி தேவையானோர் யாராக இருந்தாலும் அவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். இதில் தமிழ் சிங்களம் முஸ்லீம் ஆங்கிலம் என்று பார்த்து காணி வழங்குவதில்லை.
குறித்த ஊடக சம்மேளனம் முட்டாள்தனமாக செயற்படுகிறது.
ஊடகவியலாளர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
காலம் காலமாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதுவும் கிடைத்ததும் இல்லை கிடைக்க விட்டதும் இல்லை வய்க்கோல் பட்டரைக்கு மேல் தயவு செய்து யாரும் ஏறவேண்டாம். இரண்டாம் கட்டம் காணி கிடைப்பதற்கு விண்ணப்பியுங்கள். காணி இல்லாதவர்கள் காணியை பெற்றுக்கொள்ளுங்கள்.


