அட்டாளைச்சேனை, ஆலங்குளம் பகுதியில் உழவு இயந்திரம் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 08 வயது சிறுவன் மீது உழவு இயந்திரம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
