கீழே விழுந்து மாணவன் பலி





பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை வேன் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதின் காரணமாக கீழே விழுந்து 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து நேற்று 25 மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை