அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது யுனிசெப்


இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் தொடர்பில் அபாயகரமான அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது யுனிசெப்.

இதன்படி கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டில் சுமார் 2,28,000 ஆயிரம் குழந்தை இறப்புக்களையும், 11,000 ஆயிரம் கர்ப்பிணிகளின் இறப்புக்களையும் மற்றும் தெற்காசியாவில் 3.5 மில்லியன் தேவையற்ற கர்ப்பங்களுக்கும் மறைமுகமாக பங்களித்திருக்கலாம் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.8 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் அத்தியாவசிய பொது சுகாதார சேவைகள் கிடைக்கும் பெறுபேறுகளில் கடுமையான தடைகள் இருப்பதாக யுனிசெப் வெளியிட்ட ஆய்வு குற்றம் சாட்டியது.

இந்த முக்கியமான சேவைகளின் வீழ்ச்சி ஏழ்மையான குடும்பங்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மீது பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று யுனிசெப் பிராந்திய பணிப்பாளர் George Laryea-Adjei தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு மிகவும் அவசியமான தேவைகளை முழுமையாக மீட்டெடுப்பது மிகவும் இன்றியமையாதது.

இந்த மதிப்பீடுகள் தெற்காசியாவில் தொற்றுநோய்க்கு குழந்தை தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் இறந்தன, அவர்களில் 63% புதிதாகப் பிறந்த குழந்தைகள்.

மேலும் தொற்றுநோய் காரணமாக தெற்காசியாவில் சுமார் 420 மில்லியன் குழந்தைகள் பாடசாலையை விட்டு வெளியேறிய நிலையில், ஒன்பது மில்லியன் குழந்தைகள் ஒருபோதும் பாடசாலைக்கு திரும்ப மாட்டார்கள் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

இது குழந்தைத் திருமணங்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இதன் விளைவாக கூடுதலாக 400,000 இளம் பருவ கர்ப்பங்கள் ஏற்படுகின்றன, அத்துடன் தாய் மற்றும் குழந்தை பிறந்த மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதியது பழையவை