நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து லண்டனில் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரம் இருந்துவந்த திருமதி அம்பிகை அவர்களின் இல்லத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களுக்கும் லண்டன் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த தமிழ் இளைஞர்களில் சிலரை காவல்துறையினர் தாக்கியதாகவும், சிலரை கைதுசெய்ததாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக 'நாம் தமிழர்' கட்சியைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
