மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் மண் அகழ்வு சம்பந்தமான பொதுக்கூட்டம் போரதுதீவுப்பற்று பிரதேசசெயலாளர் இ.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றன மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் பட்டிருப்பு நவகிரி பிரிவுக்கான பொறியலாளர் உதவிப் பிரதேசசெயலாளர் பிரசேசசபை உத்தியோகஸ்தர்கள் கிராம உத்தியோகஸ்தர்கள் ஏனைய தினைக்கள உத்தியோகஸ்தர்கள் விவசாய அமைப்புக்கள் ஆகியோர்களின் பங்குபற்றுடன் கூட்டம் இடம் பெற்றன
அந்த வகையில் ஆற்று மண் அகழ்தல் மேட் மண் அகழ்தல் சட்டவிரோத மண் அகழ்தல் இது சம்பந்தமான பிரச்சனையை மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாக மண் அகழப் படுகின்ற இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளரிடம் வேண்டுதலுக்கு அமைவாக மண் அகழ்வு சம்பந்தமான கலந்துரையாடல் இடம் பெற்றன
விவசாயிகளிடம் அமைப்புக்களிடம் கேட்டபோது பிரதேச செயலகத்தினால் மண் அகழ்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டும் அதனை சட்டத்துக்கு முரணாக பயன்படுத்தி இரவு வேளைகளில் மண் சூரையாடப் படுகின்றன நாங்கள் கேட்டால் எங்களை அச்சுறுத்தி அவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மண்ணை ஏற்றிச் செல்கின்றார்கள் எமது பிரதேசம் கஷ்டத்தின் மத்தியில் உள்ள ராணமடு பிரதேசமாகும் கல்வியறிவு குறைந்த மக்கள் வாழும் பிரதேசமாகும் நாங்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் இதற்கான எந்த விதமான தீர்மானமும் கிடைக்கவில்லை மண் அகழ்வை மேற்கொண்டு வீதியினால் மக்கள் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் நாங்கள் பல தடவை ஆர்ப்பாட்டங்கள் செய்தும் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என ராணமடு பிரதேச விவசாயிகள் கூறினார் நாங்கள் மண் கொள்ளையர்களிடம் போய் சண்டை போடக்கூடிய தகுதி எங்களுக்கு இல்லை என மிகவும் மன வருத்தத்துடன் கூறினார்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் இதற்கான தீர்வினை நீங்கள் தான் உரியஅதிகாரிகளும் முறையிட்டு பெற்றுத்தருமாறு கூறினார்கள்
வேத்துசேனை கிராமம் அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பிரதேசமாகும் மண் ஏற்றுகின்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள போதும் ஆற்றை அண்டிய பிரதேசங்களில் முப்பது வருடங்களுக்கு மேல் ஆற்று மண் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு மூடப்பட்ட இடங்களை 15 அடிக்கு மேல் தோண்டி மண் ஏற்றப்படுகின்றன இதனால் மழை காலங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஆற்றுக் கட்டை உடைத்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றன இதற்கான தீர்வினை உரிய அதிகாரிகளிடம் பேசி எமது மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என வேத்துசேனை விவசாய அமைப்புகள் கூறுகின்றன
2021-01-06 ஆண்டு ஆற்று மண் அகழ்வதற்கான சிபார்சி செய்வதற்கான களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இடங்கள் 1- ஆணை கட்டிய வழி. நவகிரி ஆறு 2- ஆணை கட்டிய வழி. மூங்கிலாறு 3- ஆணை கட்டிய வழி . நவகிரி ஆறு 4- ஆணை கட்டிய வழி. நவகிரி ஆறு -5. காக்காச்சிவட்டை. நவகிரி ஆறு ஆகிய பிரதேசங்கள் ஆற்று மண் அகழ் வதற்கான களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளன
மேல் மண் மற்றும் கிரவல் மண் அழுவதற்கான சிபார்சி செய்வதற்கான களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளன 1- விவேகானந்தபுரம். திருக்கொன்றை அடி 2- களுமுந்தன் வெளி. காயன் மடு ஆகிய இரு பிரதேசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனையும் வீதியால் பயணிக்கின்ற பாதசாரிகளின் பிரச்சினையை கருதிக்கொண்டு இதற்கான அறிக்கையினை தயாரித்து உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதாக இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன
சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றுக் கொண்டு செல்கின்ற வர்களை பொதுமக்களும் விவசாய அமைப்புகளும் தடை செய்ய வேண்டும் என பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்



