மட்டக்களப்பு திரும்பெரும்துறை பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரி ஒருவர் உட்பட 5 பேரை செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 200 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திரும்பெரும்துறை பிரதேசத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது போதைப் பொருள்களுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்படுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் செய்ததுள்ளனர்
