மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் அமைக்கும் வேலைதிட்டதினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும்,கோறளைப்பற்று பிரதேசசபை ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் ஊரியன்கட்டு பிரதேசத்தில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன் மூலம் வறுமை கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதி அற்ற மக்கள் பலர் தாம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக்கூடிய வீட்டு வசதியினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

