கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊரியன்தட்டுமுனை கிராமத்தில்
"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்திற்கேற்ப விரைவான கட்டுமானச் செலவு-
செயற்றிறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான" அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டேன்.
இந்த வீட்டுத்திட்டமானது எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியாமல் உள்ளது. என்னுடைய அரசியல் வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு எங்களது செயற்றிட்டங்களில் ஒன்றாகத்தான் இது இருந்தது. கடந்த அரசுக்காலத்தில் இத்திட்டதிலே 65,000 வீடுகள் வந்தது. வடக்குக் கிழக்கு மக்களின் வரலாற்றிலே இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். அக்காலத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் இது பொருத்தமான வீடா, பொருத்து வீடா என ஆராய்ந்து கொண்டிருந்தார்களே தவிர அதை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. இந்த வீடுகளில் ஒரு வீடு கூட அக்காலத்தில் கட்டப்பட்டவில்லை.
வீடு என்பது மனிதனுக்குரிய அடிப்படைத் தேவையாகும். இவ்வாறான அடிப்படைத் தேவைகள் இன்றி பல உயிர்கள் பறிபோயுள்ளது என்பதை நாம் அண்மைக்கால பல நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. எமக்கு 52,000 வீடுகள் தேவை. 59,000 மலசலகூடங்கள் தேவை. இவ்வாறு பல தேவைகள் காணப்படுகின்றன.
2 கோடி 60 இலட்சம் பெறுமதியான பாலம் ஒன்றிற்கான அடிக்கல்லானது கட்டுமுறிவில் நடப்பட்டுள்ளது. வீதிக்காக 5 கோடியே 80 இலட்சம் ஒதுக்கியுள்ளேன். 3 தசாப்த காலத்தில் பல இன்னல்களுக்கு உள்ளான எமது மக்களை நாம் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு உள்ளது.
இதற்காக எமக்கு உதவிய மறைந்த எங்களது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு உண்மையிலேயே நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக நான் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற அமர்விலே பேசியிருந்தேன். இதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டேன். இதன் பலனாக, 22.02.2020 அன்று, இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட இருந்த வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு, அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை நான் அழைத்து வந்து வந்தாறுமூலை - பலாச்சோலையில் இதற்கான அடிக்கல்லினை நாட்டினோம்.
தற்போது, 450பயனாளிகளில், முதல் 100 பயனாளிகளுக்கான
வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வாகரையில் 10 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல மணித்தியாலங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நான் மேற்கொண்ட முயற்சியின் பலனே இன்றைய இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வாகும். இதுவே வரலாறு.
இன்று 4 வலயங்களில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. அந்த வகையில் வாகரை, ஏறாவூர் பற்று வந்தாறுமூலை, வவுணதீவு மண்முனை மேற்கு மற்றும் முனைக்காடு - பட்டிப்பளை ஆகியவற்றில் இன்றைய தினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமைகளில் இருந்து இந்த வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பமாக இருக்கின்றன. வருகின்ற சித்திரை வருடத்திற்கு நான் இந்த வீடுகளைத் திறந்து வைப்பேன். மேலும் 1000 வீடுகளை எமது மக்களுக்காகக் கேட்டுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.
அனைத்துவிதமான வசதிகளையும், கொண்டதாக இந்த வீடு அமைந்துள்ளது. சகல துறைகளிலும், திறமையான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். கிட்டத்தட்ட 700 மலசலகூடங்களை எதிர்வரும் 8 ஆம் மாதத்திற்கு முன்னராக வழங்க முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் என்னை தெரிவு செய்த மக்களுக்காக நான் எனது பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றேன். உண்மையிலே இதற்காக என்னைத் தெரிவு செய்த மக்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.