மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 20பாடசாலைக்கு குத்து விளக்கு வழங்கும் நிகழ்வு இன்று(17) புதன்கிழமை நாற்பதுவட்டை பாலர் பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது, நாற்பதுவட்டை கிராமத்தில் உள்ள பாலர் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாலர் கல்வியை வழங்கும் பொருட்டு, நாற்பதுவட்டை பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பினையேற்று, அதன் ஆரம்ப நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் மு. அருணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி. புஸ்பலிங்கம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


