அலுவலக ரயில்கள் மாத்திரமே சேவையில்


 

ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநீதியான முறையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ரயில்வே பொதுமுகாமையாளர்களுடன் இடம்பெற்றக் கலந்துரையாடல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு  தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, அலுவலக ரயில் சேவைகள் சில மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தபால் ரயில் சேவைகளும்  நேற்று இரவு முதல்  நிறுத்தப்பட்டுள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக குறித்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை