சிறுவனை இழுத்துச்சென்ற முதலை: மனதை உலுக்கிய சம்பவம்


மூதூர் பிரதேச செயலகம் - பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளத்தில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருக்கும்போது 15 வயது தமிழ் சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

தற்போது வரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பொலிசார் மற்றும் கடற்படையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் மீட்புக்குழுவினை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.


எதிர்பாராத ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களின் போது உயிருக்குப் போராடுவோரை துரிதகதியில் மீட்பதற்கான பொறிமுறை மூதூர் கிழக்கில் இல்லாமையின் காரணமாக அநாவசிய உயிரிழப்புக்கள் பதிவாகின்றன.

உயிராபத்துக்கள் ஏற்படும் போது பொலிஸாரை அழைப்பதனால் அவர்களால் மனித வலுவைத் தவிர வேறு எதனையும் செய்யும் வசதிகள் அவர்களிடமும் காணப்படுவதில்லை.
புதியது பழையவை