இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவருக்கு ஆதரவாக பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை விடுத்ததன் காரணமாகவும், உலகமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழின அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் கோரிக்கை காரணமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
