ஈழப்பாடலை கேட்டு கண்கலங்கிய M.S.விஸ்வநாதன்


ஆறாம் நிலம் படம் மனதை உலுக்கியது என்றும் அந்தப் படத்தில் இருந்த மெய்மை தன்னை அடித்துப்போட்டது எனவும் “ஆறாம் நிலம்” முழு நீளத்திரைப்படம் குறித்து மனம் திறந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

அண்மையில் ஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தின் “ஆறாம் நிலம்” முழு நீளத்திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது. அன்று படத்தை பார்த்து கண்கலங்கிய அவர், படம் குறித்து எமது ஊடகத்தின் நேர்காணலில் மனம் திறந்தார்.

இதன்போது ஆறாவது நிலம் என்ற தலைப்பே புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கிறது.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்கனை தாண்டி ஆறாவது நிலம் வரண்ட பாலை நிலமாக உருவெடுத்திருக்கிறது.

M.S.விஸ்வநாதன் என்னிடம் சென்னது எத்தனையோ பாடல்களை பாடியிருக்கிறேன். எத்தனையோ பாடல்களுக்கு நான் துயரப்பட்டிருக்கிறேன். ஆனால் கண்கலங்கிய ஒரே ஈழப் பாடல் - நான் எழுதியது என்றார்.


உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் தாயை, மையமாக கொண்டு இந்தப் படம் சுழல்கிறது.

போர் இடம்பெற்ற ஆறு இடங்களை மையப்படுத்தி இந்தக் கதையின் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் நம்பிக்கைகள் நிறைந்தவர்கள், ஆனால் அவர்களின் தேடல் இந்த படத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வித்தியாசமான போரை நடத்துகின்றன. ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும், அவர்கள் வாழ்வில் சந்தித்த சவால்களையும் சித்தரிக்கின்றது இந்தக் கதை.
புதியது பழையவை