19 வயது யுவதி பட்டப்பகலில் படுகொலை


கலேவெல, பட்டிவெல சந்தியில் நேற்றுப் பிற்பகல் பட்டப்பகலில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

19 வயது யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

குடும்பப் பிரச்னை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை