தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான செயல்நூல் வழங்கி வைப்பு




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தின்.ஒரு சமூகத்தின் அழியாத சொத்தாக இருப்பதும் அச் சமூகத்தின் இருப்பைப் பாதுகாப்பதோடு சமூக அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதும் அச் சமூகத்தினர் கற்ற கல்வியே ஆகும்.

 அந்தவகையில் கடந்த சில வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாகவும் covid  19 தொற்று நோய் காரணமாகவும் இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் சீராக இடம்பெறாமல் இருந்த இக் காலகட்டத்தில் மாணவர்களைத் தயார்படுத்தும் துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச பாடசாலைகளில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கென செயலட்டைகள் அடங்கிய தொகுப்புக் கைந்நூல் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் தலைமையில் போரதீவுப்பற்றுப் பிரதேச கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (05.04.2021) நடைபெற்றது.


இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், பட்டிருப்பு வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திவிகரன், போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராசா, பட்டிருப்பு வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் ஆகியோருடன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்த்தர், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள்,கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இச் செயலட்டைத் தொகுப்பினை வெளியிடுவதற்கான அணுசரணை வழங்கிய அணுசரணையாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.


புதியது பழையவை