நாட்டில் அண்மையில் கோழி இறைச்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததால் கோழி வியாபாரம் செய்வோர் மட்டுமன்றி நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் நேற்று (10) கோழி விற்பனையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரு கிலோ கோழியை அதிகபட்சமாக ரூ .600 க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலந்துரையாடலுக்கு கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லசந்த அழகியவண்ணதலைமை தாங்கினார்.
கொழும்பு பெட்டா கோழி வியாபாரிகள் சமீபத்தில் சந்தையில் கோழியின் விலை அதிகரித்ததால் வியபாரத்தில் இருந்து விலக முடிவெடுத்தமை குறிப்பிடத்தக்கது