கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை நாயை ஏவிவிட்டு கடிக்க தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கறியலில் வைக்குமாறு மினுவாங்கொட பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாடொன்றை அடுத்து குறித்தநபரை பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர் ஆஜராகாததை அடுத்து பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் வருவதை அவதானித்த சந்தேக நபர் வீட்டிற்குள் சென்று நாயை அழைத்து பொலிஸாரை காட்டி கடிக்க தூண்டிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காலில் நாய் கடித்துள்ளது. காயமடைந்த கான்ஸ்டபிள் கம்பகா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.