ஆயருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி நினைவு


தமிழ்தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரல், ஓய்வுநிலை ஆயர் அமரர் வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்க நாளான இன்று திங்கள்கிழமை (05/04/2021) பி.ப 4, மணிக்கு மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றன.

மட்டக்களப்புமாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த அஞ்சலி நிகழ்வில் மறைந்த மன்னார் முன்னாள் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராஜப்பு ஜோசப் அவர்களின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவு சுடர்கள் ஏற்றி மௌனப்பிரார்தனை்செய்வதுடன் அன்னாரின் நினைவு தொடர்பாக "நினைவுரையும்" இடம்பெறன

ஆன்மீக தலைவராக இருந்து தமிழ்தேசியத்தின்பால் அக்கறையுடன் செயலாற்றி வடக்கு கிழக்கு மக்கள் பல நெருக்கடிகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், தடைகளையும் சந்தித்த வேளைகளில் எல்லாம் தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் துணிந்து குரல் கொடுத்த உன்னத மகான் ஆண்டகை இராஜப்பு ஜோசப் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரல், ஓய்வுநிலை ஆயர் அமரர் வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் அஞ்சலி நினைவு மட்டுநகர் தந்தைசெல்வா சிலை வளாகத்தில் அஞ்சலி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா இலங்கைத் தமிழரசு கட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைத் தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்தின், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இ.பிரசன்னா, மா.நடராசா,மட்டுநகர் முதல்வர் சரவணபவன், மட்டக்களப்பு கத்தோலிக்க மத குருக்கள், மட்டுமாநகர சபை உறுப்பினர்களும் உயிர் நீத்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதியது பழையவை