கிழக்கு மாகாணத்திற்கு அமரபுர ராமன்ஜ சங்கசபா நிக்காய பிரதம தேரர்கள், கிறிஸ்தவ வணக்கத்திற்குரிய பிதாக்கள் மற்றும் முஸ்லீம் மௌலவிகள் உட்பட சமயத்தலைவர்கள் இன்று வியாழக்கிழமை (08) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் 3 நாள் விஜயத்தினை மேற்கொண்ட குறித்த மத குருமார்களினால் சர்வமத நல்லுறவை மேம்படுத்துவதற்கான பொத்துவில் குமுதுவிகாரை மற்றும் அப்பகுதி முஸ்லீம் மக்களுடனான சந்திப்பு அதனை தொடர்ந்து காத்தான்குடி பாசாலை மாணவர்கள், பள்ளிவாசல் மௌலவிகள் உடனான சந்திதிப்பு மற்றும் மாமாங்கஈஸ்வரர் ஆலய தரிசனம் என பல்வேறு கள செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.


