கருணாவுக்கு தெரியாத புலிகளின் வரலாறு தனக்கே தெரியும் என்கிறாரா ஞானம் ?



கருணாவுக்கு தெரியாத புலிகளின் வரலாறு 
தனக்கே தெரியும் என்கிறாரா  ஞானம் ?


புளொட் சித்தாந்த வாதிகளுக்கு வித்தியாசமான முறையில் மூக்கையும் அதன் குணாதிசயங்களையும் படைத்துள்ளார் கடவுள். இவர்கள் வீட்டுக் குசினி எவ்வளவு நாறினாலும், வீதியால் செல்வோருக்குக் குமட்டினாலும் ,அடுத்த வீட்டின் சமயலறையில் ஏதோ கருகுகிறது; தீய்கிறது என்றே சொல்வார்கள். இதற்கு ஸ்டாலின் ஞானமும் விதிவிலக்கல்ல.

புலிகளுக்குளே பிளவு ஏற்பட்டதென்றால்,மோதல் நிகழ்ந்ததென்றால் அது பற்றிக் குறிப்பிட வேண்டியது கருணா அம்மான்தானே. செல்வி மனோகரோ,ஸ்டாலின் ஞானமோ அல்ல. 
ஸ்டாலின் ஞானத்தின் கற்பனையில் உதித்த கதைகளுக்கு உயிர் கொடுக்க முனைந்தவர் செல்வி மனோகர். அப்போதே இவரின் வாயை அடைத்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.  போதாததற்கு விடுதலைப்புலிகளின் ஒழுக்கநெறி பற்றி  விபரித்த கருணா அம்மான் செல்வி மனோகர் குறிப்பிட்டவாறு  எதுவும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். ஆயினும் அன்றைய நிலையில் தான் தான் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்போல் விளங்கினார் போலவும்  சின்னப்பொடியன் கருணா அம்மானுக்கு எதுவும் விளங்காது என்ற பாணியிலும்  அவரது கருத்தை மறுத்துரைக்க முயல்கிறார் ஸ்டாலின் ஞானம்.

முதலில் ஸ்டாலின் ஞானம் தான் அங்கம் வகித்த புளொட் அமைப்பினுள் நிகழ்ந்த உட்கட்சிப்  படுகொலைகள் விடயத்தில் இனியாவது மௌனத்தைக் கலைப்பாரா ? முதலில் தமிழீழ கழுகுகள் படை நிறுவனர்களில் ஒருவரான ராஜ் மோகன் காணாமற் செய்யப்பட்டமை பற்றிப் பார்ப்போம்.

தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்த இவரும் இன்னொரு உறுப்பினரும் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காசி ஆனந்தனின் பிறந்த நாளைக் கொண்டாட (ஏப்ரல்  4) ஏற்பாடு செய்தனர். தந்தை செல்வாவும் இவ் விழாவுக்காக அழைக்கப்பட்டிருந்தார் .அக்கால கட்டத்தில் செ .ராஜதுரைக்கும் தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் சிறிய கருத்து முரண்பாடு இருந்தது . விழா அன்று காலையில் மட்டக்களப்பு  புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய தந்தை செல்வாவிடம் விழா நிகழ்ச்சி நிரலின் துண்டுப் பிரசுரத்தை வழங்கினர் ராஜ் மோகனும் இன்னொருவரும்.மிகவும் பொறுமைசாலியான தந்தை செல்வா இந்த நிகழ்ச்சி  நிரலைப் பார்த்ததும் சினமடைந்தார். "இதில் இராஜதுரையின் பெயர் இல்லையே ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். உண்மையான பதிலைச் சொல்ல இருவராலும் முடியவில்லை. புகையிரத நிலையத்திலிருந்து வாடி வீட்டுக்குச் சென்ற தந்தை அன்று மாலை புகையிரதத்தில் திரும்பும் வரை எவரையும் சந்திக்கவில்லை. இராஜதுரையை மதிக்காத இடத்தில் தனக்கும்  வேலையில்லை என்பதே  அவர் தனது மௌனத்தால் சொன்ன பதில். இன்று தந்தை செல்வாவின் சிலை நிறுவியமை தொடர்பாக சொந்த வீட்டு வரலாறே தெரியாத சிலரைத் தூண்டிவிடும் ஸ்டாலின் ஞானம் தான் அங்கம் வகித்த புளொட் இயக்கத்தால் ஏன் எதற்காக ராஜ் மோகன் காணாமற் செய்யப்பட்டார்.என்பதை விளக்குவாரா ? இது அவரது அரசியல் நேர்மைக்கு  விடுக்கும் சவால் !  (இல்லாத நேர்மைக்கு நான் எங்கே போவது என அவர் பதிலளிக்கவும் கூடும் )

யாழ். அளவெட்டியில் இறைகுமாரன்,உமைகுமாரன் ஆகியதமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களை கடத்தி சென்று வயல் வெளியில் சடலமாக வீசினர் புளொட் டினர். இவர்கள்இருவரது மரணச் சடங்கிலும் கலந்து கொண்ட மக்கள் தொகையைப் பார்த்த புளொட் டினர் இன்று ஞானம் உருவாக்குவது போல் புதுக் கதையொன்றை மட்டக்களப்பில் உருவாக்கினர். யோகன் கண்ணமுத்து தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில்  அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதம பேச்சாளர் இரா.வாசுதே வா. அவர் தனது உரையில் "இப் படுகொலைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியினரே காரணம்"  எனக்   குற்றஞ் சாட்டினார். இதற்கு அப்போது எதிர்க் கட்சி தலைவராக விளங்கிய அமிர்தலிங்கம் சொன்ன பதில் "சுட்டவர்களே அஞ்சலிக் கூட்டம் நடத்துகிறார்கள்“

இனியாவது   இறைகுமாரன் - உமைகுமாரன் படுகொலைகளுக்கு காரணம் சொல்வாரா ஞானம் .

சில வருடங்களின் பின்னர் இப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய சந்ததியாருக்கு என்ன நிகழ்ந்தது என்றாவது சொல்வாரா ? 

சுழிபுரத்தில் புலிகளின் சுவரொட்டிகளை ஒட்டச்சென்ற ஆறு மாணவர்களை கொன்று அவர்கள் சிலரின் ஆண் உறுப்புக்களை அறுத்து வாயில் வைத்துப் புதைத்த மனோ வியாதிக்காரர்கள் யார் என்றாவது சொல்வாரா ?

குதிரையின் முகமூடியை போட்டால் கழுதை என்றுமே குதிரையாகிவிட முடியாது.  ஞானத்தை பொறுத்தவரை அடி மனதில் புளொட் டில் இருந்த சிந்தனைகளே  வெளிப்படும். அதில் விடுதலை யுணர்வு அறவே இருக்காது. காழ்ப்புணர்வே மேலோங்கியிருக்கும்.  இன்று கிழக்கின் தேசியம் என்ற பெயரில் தந்தை செல்வா மீதும் புலிகள் மீதும் வாந்தி எடுக்கின்றனர்  ஞானம் என்ற  பரமார்த்த குருவும் அவரது சீடர்களும். 

யாழ்.மாவட்ட  சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கையனுடன் வந்து ஒட்டிக்கொண்ட அருண் சித்தார்த்பண்ணுகிற கோளாறுகளை ஒத்ததே பிள்ளையான் கூடாரத்துக்குள் புகுந்து கொண்ட ஸ்டாலின் என்ற ஒட்டகத்தின் கதை

தங்கள் பிள்ளைகளுக்கு உண்மையான வரலாற்றைப் எடுத்தியம்ப வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை பவுனும் கிலிட்டும் ஒன்றெல்ல என்பதை விளக்க வேண்டும் .
புதியது பழையவை