மட்டக்களப்பு மகிழூர் கிராமத்தினை பிறப்பிடமாகக் கொண்டவரும் மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்திய கலாநிதி பழனிநாதன் - கீதாஞ்சலி தனது நோய் காரணமாக சிறிது காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திகதி (22.04.2021) காலமானார்.
இவர் மட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்/வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார். யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறையில் பயின்ற இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் கடமையாற்றியவருமாவார்.
இவரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் கிருஷ்ணன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது.
