கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (06) முற்றுகையிட்டு 21 இலட்சத்து 600 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்று 12 பீப்பாக்கள் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு ஆற்றுப் பகுதியில் சம்பவதினமான இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என.பி. குணவர்த்தன தலைமையில் ஜெயந்த, சந்திரசிறி, அமரசிறி, றமேஷ், சந்திரகுமார், தனுஷ்கர், நந்தகே கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த கசிப்பு உற்பத்திநிலையத்தை முற்றுகையிட்டனர்

இதன்போது அங்கு எவரும் இல்லாத நிலையில் கசிப்பு உற்பத்திக்காக தயாரிக்கப்பட்ட 12 பீப்பாக்களில் 21 இலச்சத்து 600 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாக்களையும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை