மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இனைத் தலைவரும் பாராளுமன்ற. உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியயின் தலைவருமாகிய சி.சந்திரகாந்தன் தலமையில் இடம் பெற்றனர்.
வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் இருக்கின்ற ஒரு லட்சம் கிலோ மீட்டர்வரையிலான வீதிப் புனரமைப்பில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கின்ற பருத்திச்சேனை கிராமத்தில் உள்ள1.7 km நீளம் கொண்ட வீதிக்கான அடிக்கலினையும் அதனுடன் இணைந்ததாக 2 km நீளமான மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் கோவில் வீதிக்குரிய அடிக்கலினையும் நட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.
இதன் அடிப்படையில் மிக விரைவில் அங்குள்ள மக்கள் இந்த வீதிகள் மூலம் தமது அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.
இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார் மற்றும் பிரதானபொறியியலாளர் திரு. பரதன் நிறைவேற்று பொறியியலாளர் திரு. சசிநந்தன் அத்தோடு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சுதாகர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. சண்முகராசா அத்தோடு எமது கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.