மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றிருந்தது.
இதன்போது அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஸ்டிக்கப்பட்டது.


