அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கராஜா வனத்தில் நீர்தேக்கம் ஒன்றினை அமைத்து அதனூடாக அம்பாந்தோட்டை பகுதிக்கு நீர் வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
