மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் கடந்த மூன்று நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்
இந்த நிலையில் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று பிற்பகல் 2 மணி வரை மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் கடந்த முதலாம் திகதி காலமானார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகை நீண்ட நாள் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் திருச்சிலுவை மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்
