புதுவருடத்தினை முன்னிட்டு இருபாலாருக்குமான மாபெரும் சைக்கிள் மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்திற்கான நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஸபக்ச அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ தேனுக விதானகமகே அவர்களின் வழிநடாத்தலின் கீழ் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றினைந்து தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இருபாலாருக்குமான மாபெரும் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள் - 2021 நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இப் போட்டிகளானது 17.04.2021 சனிக்கிழமை மட்/இந்துக்கல்லூரி மைதான முன்றலில் காலை 6.30 மணிக்கு மரதனும், காலை 8.00 மணிக்கு சைக்கிள் ஓட்டமும் நடைபெறவுள்ளன.

சைக்கிள் ஓட்டம் ஆண்கள் 120 Km, பெண்கள் 60 Km. அரை மரதன் ஓட்டம் 20 Km , 10 Km மரதன் ஓட்டம் ஆகியன இடம்பெறவுள்ளன. இப் போட்டிகளில் 1ம் இடத்திற்கு 50,000/- பணப்பரிசும், 2ம் இடத்திற்கு 25,000/- பணப்பரிசும், 3ம் இடத்திற்கு 10,000/- பணப்பரிசும் மேலும் 10 வது நிலை வரை பாராட்டு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவு மற்றும் சகல பிரதேச செயலகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலகப்பிரிவு விளையாட்டு உத்தியோகத்தர்களிடம் அல்லது மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவில் எதிர்வரும் 09.04.2021 திகதிக்கு முன்னர் சமர்பித்தல் வேண்டும்.

சகல போட்டிகளுக்குமான வயதெல்லை 2021.01.01ம் திகதியில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தினை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை