மட்டக்களப்பில் முடக்கப்பட்ட கிராமசேவகர் பிரிவான சின்ன ஊறணி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) 155 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்
குறித்த கிராமசேவகர் பிரிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கணடறியப்பட்டதையடுத்து அந்த பகுதி கடந்த 18 ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) முடக்கப்பட்ட அந்த பகுதியிலுள்ள 155 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது
இதில் தொற்று கண்டறியப்பட்டவர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
