சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்



கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேறியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்நிலையிலேயே துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

தற்போது குழுநிலை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை